பா.ஜ.க.,கூட்டணியின் 2&வது வேட்பாளர் பட்டியல் இன்று இறுதிசெய்யப்படும் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரவாசகம் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. நரேந்திர மோடியின் உருவம் போதித்த தாமரைவெல்லட்டும் தமிழகம் வளரட்டும்  என்ற வாசகத்தை பாஜக மூத்த தலைவர் முரளிதர ராவ் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய தமிழிசை திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளயிருப்பதாக தெரிவித்தார். அப்போது வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார். சட்ட மன்ற தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்த தமிழிசை பாஜக மேலிடம்தான் அதனை அறிவிக்க வேண்டும் என்று கூறினார். இதனிடையை பாரதிய ஜனதா கூட்டணியில் இந்தியமக்கள் கல்வி கழகத்திற்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தேவநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply