திருவள்ளுவரை திருநீறுடன் பார்ப்பதற்காக மக்களை கைது செய்யவேண்டும் என்று, திமுக, விரும்பினால் அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.திருவள்ளுவர் கடவுளை நம்பாத நாத்திகர் கிடையாது. அவர் கடவுளைவணங்கிய ஆத்திகவாதி. இதற்கு அவரது திருக்குறள்களே சான்று.

இப்போது திமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் ஆகியவற்றுக்கு நடுவே தான் மோதல் ஏற்பட்டுள்ளது.திருவள்ளுவரை, விபூதி அணிந்தவராக பார்ப்பதற்காக கைதுசெய்ய முடியாது. திருவள்ளுவர் ஆத்திகர் என்பதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படங்கள், கோவில்களில் எடுக்கப்பட்டபடங்கள், என ஆதாரங்கள் பல உள்ளது.

 

திருவள்ளுவர், திமுகவுக்கு மட்டும் சொந்தமானவர்அல்ல . ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானவர். பாஜக உலகளாவிய தத்துவத்தின் அடிப்படையில் இந்தவிஷயத்தை அணுகுகிறது. திருவள்ளுவர் விஷயமாக விவாதிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. எந்த ஒரு மூலையில் விவாதம் நடந்தாலும் பாஜக அதில்பங்கேற்கும்.

சென்னையில் இன்று பாஜக மாவட்டத் தலைவர் களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பேசியது.

One response to “திமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் ஆகியவற்றுக்கு நடுவே தான் மோதல்”