தமிழ்நாட்டில் பாஜக இருக்கிறது! செல்போன்மூலம் சேர்க்கப்பட்ட 60 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! 60 லட்சம் உறுப்பினர்களும் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வுக்கு வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்! ஆனாலும் அவர்கள் பாஜக உருப்பினர்களே! பாஜக இந்த தேர்தலில் வெற்றிப்பெற வாய்ப்பு இல்லை என நினைத்த காரணத்தால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்!

     நான் செல்போன் வாயிலாக உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பல திமுகவினரின் மற்றும் அதிமுகவினரின் இல்ல பெண்களெல்லாம் பாஜக வில் உறுப்பினராக சேர்ந்தார்கள்! நான் இந்த கழகத்தில் பொறுப்பில் இருக்கிறேன்! எனவே என்னால் முடியாது, என்மனைவி சேருவாள் அனளை உங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள்! என்று சொன்ன திமுகவினரும் அதிமுகவினரும் அதிகம் உண்டு!  

     கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் 1998 ல் காலூன்றி மத்திய அமைச்சரானார் பொன்னார் அவர்கள்! இப்போதும் 2014ல் வெற்றிப்பெற்று மத்திய அமைச்சராக உள்ளார்! 2001ல் சென்னை மைலாப்பூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் மாயவரம், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஆகிய தொகுதிகளில் காலூன்றி தமிழக சட்டசபையில் பணியாற்றியுள்ளது பாஜக! அதற்கும் முன்பாக கன்னியாக்குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து 1996 லேயே சட்டசபையில் கால் பதித்தது பாஜக!

     இத்தனையும் தெரிந்திருந்தும் ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற விடமாட்டோம் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால்? அதற்கான காரணம் இல்லாமல் இல்லை!

     இப்போது தமிழக பாஜக, திமுகவிலும் காங்கிரசிலும் கால்பதித்திருக்கிறது! திமுக அதிமுகவின் வாக்காளர்களாக விளங்கியவர்கள் எல்லோரும் இப்போது கூண்டோடு பாஜக வுக்கு வாக்களிக்க உள்ளனர்!

     சுதந்திரம் வாங்கியதுமுதல், தேசபக்தி காரணமாக காங்கிரசுக்கு வாக்களித்து வந்தவர்கள் இப்போது கூண்டோடு பாஜகவுக்கு வாக்களிக்கவுள்ளனர்! காங்கிரஸ் மற்றும் திமுக அதிமுக கட்சியினரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இப்போது மோடியின் ரசிகர்கர்களாக மாறியுள்ளனர்!

     இதை மனதில் வைத்துக்கொண்டுதான் ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் காலூன்றமுடியாது என்று சொல்கிறார்கள்! அவர்கள் சொல்வதன் பொருள் திமுக காங்கிரஸ் குடும்பங்களில் பாஜக காலூன்ற முடியாது என்பதே!

     அதையும் பார்த்துவிடலாம் என்று பாஜக களத்தில் இறங்கிவிட்டது! பெண்களும் ஆண்களும் சாரை சாரையாக கழகங்களில் இருந்தும் காங்கிரசில் இருந்தும் பாஜக வுக்கு வந்தவண்ணமாக உள்ளனர்! விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும்!

                                        நன்றி – குமரிகிருஷ்ணன்

Leave a Reply