திமுகவும்…நமதே! திகாரும்…நமதே! காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்க வில்லை என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்துவிலகிய கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில்சந்தித்து திமுக-வில் தன்னை இணைத்து கொண்டார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று கரூரில் நடந்தது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்றார். மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 103 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சிசெய்கிறார். இதற்கு மோடி காரணமாக இருக்கிறார். ‘மோடி தன்னை மன்னராக நினைத்துவருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தன் மனதில் தன்னை கடவுளாக நினைத்து கொண்டு இருக்கிறார்.

வரும் தேர்தலில் அதிமுக, பாஜக தமிழகத்தில் எந்த பகுதிக்குச் சென்றும் ஓட்டுக்கேட்க முடியாது. மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள். அடுத்தமுறை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு 50 ஆண்டுகள பின்னோக்கி சென்று விடும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்டபஞ்சாயத்து செய்கிறார் மோடி, மாநில அரசு கிரிமினல் கேபினன்ட், மத்திய அரசு பொலிடிக்கல் புரோக்கர் என்ற அவர், மோடி மற்றும் எடப்பாடி அரசை வீட்டிற்கு அனுப்புவதுதான் நமது கடமை. நாடும் நமதே நாற்பதும் நமதே என்று கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில், நாடும்நமதே நாற்பதும் நமதே! என்று கனவு காணும் ஸ்டாலின் அவர்களே! ஊழல் சர்க்கார் நமதே!

ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த திமுக ஊழல் ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! திமுகவும்…நமதே! திகாரும்…நமதே! என்று கடந்த காங்கிரஸ்கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply