திமுக, காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில், நேற்று அவர் இது பற்றி கூறியதாவது, திமுக, காங்கிரஸ் கூட்டணி மக்களால் நிராகரிக்கபட்ட ஒருகூட்டணி.

மக்களின் மறதியை மூலதனமாக கொண்டு இந்தக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு துரோகம் செய்தகட்சி காங்கிரஸ். இலங்கை தமிழர்களுக்கும் துரோகம்செய்த கட்சி. இவற்றையெல்லாம் யாரும் மறக்க முடியாது. எனவே, இந்தகூட்டணி தோல்வியடையும். இந்த கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கூட்டணியில் இடம் கிடைக் காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சி திமுக அணியில் சேர்ந்துவிட்டது. இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply