அரசியலில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கும்முதிர்ச்சி செயல் தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை கே.கே.நகரில் தூய்மை இந்தியாதிட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தூய்மைப்பணி மேற்கொண்டார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை. திமுகதலைவர் கருணாநிதியின் முதிர்ச்சியில் ஓரளவுக்காவது ஸ்டாலின் முதிர்ச்சி அடைந்திருப்பார் என பார்த்தால், மீண்டும் அவர் பாஜக விளம்பரம்தேடுகிறது என்கிறார்.

மோடியின் கட்சி தமிழகத்தில் விளம்பரம்தேட வேண்டிய அவசியம் இல்லை. இது ஸ்டாலினுக்கும் தெரியும்.கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவை முன்னிட்டு பல கட்சித் தலைவர்களையும் அழைத்திருக்கிறார் ஸ்டாலின்.

லாலு பிரசாத்யாதவ் மீது ரூ.1000 கோடி ஊழல் வழக்கு உள்ளது. அவரை அழைப்பது திமுகவுக்குப் பெருமையாக உள்ளதா? தமிழக அரசியல் நாகரிகமாக இல்லாமல், அதலபாதாளத்தில் போய்க் கொண்டிருக்கிறது'' என்றார் தமிழிசை.

Leave a Reply