திராவிடம் என்ற பெயரில் தமிழக மக்களையும், தமிழையும் திமுக ஏமாற்றிவருவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.


புதுச்சேரி சாரம் பகுதியில் புதிய துணை தபால்நிலைய கட்டிடத்துக்கான திறப்புவிழா நடைபெற்றது. இந்த கட்டிடத்தை திறந்துவைத்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் திராவிட கட்சிகள் என்னென்ன திட்டங்களை கொண்டுவந்தன என்று கேள்வி எழுப்பினார். நாளுக்கு நாள் திமுக வீழ்ச்சி அடைந்து வருவதாக கூறியவர், அந்தக் கட்சியில் யாரும் சேரமாட்டார்கள் என்று தெரிவித்தார். திராவிடம் என்ற பெயரில் தமிழையும், தமிழர்களையும் திமுக ஏமாற்றிவருவதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

Leave a Reply