திரிணாமுல் காங்கிரஸ் கரோனாவை விட மிகவும் ஆபத்தானது என மேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேற்குவங்க மாநிலம், நந்திகிராமத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியவர், யரோ ஒருவர் என்னிடம்கேட்டார், ‘தாதா! இந்த கரோனா எப்போது போகும் என்றார்?’ அதற்கு, நான் மருத்துவர் கிடையாது, ஆனால் தடுப்பூசி வருவதால் அதுபோய்விடும் என்று சொன்னேன்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கரோனாவைவிட ஆபத்தானது, அவர்கள் எப்போது போவார்கள் என்று என்னால் சொல்லமுடியும். அவர்களுக்கான தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். மே 20-க்குப் பிறகு இந்தவைரஸ் நிச்சயமாக வங்கத்திலிருந்து சென்றுவிடும்.

அத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் பெயரில் எந்தவைரஸும் இருக்காது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. 200 இடங்களை வென்று பாஜக புதிய ஆட்சியை அமைக்கும் என்றார்.

Comments are closed.