''திரிபுராவில், பா.ஜ., வின் கொள்கைக்கு வெற்றிகிடைத்துள்ளது; வெற்றிப்பயணத்தை தொடர, பா.ஜ.க, கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது,'' என, பிரதமர், நரேந்திர மோடி கூறி உள்ளார்.

டில்லியில் நடந்த, பா.ஜ., பார்லிமென்ட் கூட்டத்தில், பிரதமர், மோடி நேற்று பேசினார்.அப்போது, 'நம் வெற்றிப்பயணம் தொடர்கிறது; நம் அடுத்த இலக்கு, கர்நாடகா' என, கூட்டத்தில் பங்கேற்றோர், கோஷம் எழுப்பி, மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

இதன்பின், மோடி பேசியதாவது: வடகிழக்கு மாநிலங்களான, திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில், பா.ஜ.,சிறப்பானவெற்றிகளை பதிவு செய்துள்ளது.திரிபுராவில், பா.ஜ.,வின் கொள்கைக்கு வெற்றிகிடைத்து உள்ளது; வெற்றிப்பயணத்தை தொடர, பா.ஜ., கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.

திரிபுரா சிறியமாநிலம் என்றும், இரண்டு லோக்சபா தொகுதிகள் மட்டுமே உள்ளதாக கூறி, அங்கு, பா.ஜ., பெற்ற வெற்றியை, சிலர் குறைத்து பேசி வருகின்றனர்.ஆனால், 25 ஆண்டு களாக, அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்திவந்த, மார்க்சிஸ்ட் கட்சியை, பா.ஜ., அகற்றிக்காட்டி உள்ளது. மாற்றத்தை விரும்பிய மக்கள், பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர்.

இடதுசாரிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், வன்முறை, வெறுப் புணர்வு அதிகரித்து வருகிறது. நாடுமுழுவதும், இடதுசாரிகளை மக்கள் ஒதுக்கி வருகின்றனர்.உலகம்முழுவதும், அழியத் துவங்கியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம், இந்தியாவிலும் அழியும் நிலையில் உள்ளது. கேரளாவில் மட்டுமே தற்போது, மார்க்சிஸ்ட் ஆட்சி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply