திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு, தகுதியான நபர்களை விண்ணப் பிக்க வைக்க வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறைவனுக்கு செலுத்திய உண்டியல் காணிக்கைபணத்தில் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு சொகுசு கார்களை வாங்கி குவிக்கிறார்கள். அறநிலைய துறையின் இது போன்ற பல்வேறு அவலங்கள் காரணமாக திருக்கோயில்கள் பல திறமையாகசெயல்பட முடியாமல் உள்ளன. இதற்காக பாஜக சார்பில் போராடி வருகிறோம். இப்போது அறநிலையத் துறையில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நீதி மன்றத்தில் மாநில அரசு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தின்படி, ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து திருக் கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப் பங்களை வரவேற்கிறது. நாம் எல்லோரும் திருக்கோயில்களில் நடைபெறும் அவலங்களை குறைசொல்வதோடு மட்டுமல்லாது, அவற்றையெல்லாம் சரிசெய்யும் அதிகாரத்தையும் பெறக் கூடிய மிக சாதகமான சூழ்நிலை தற்போது நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, பாஜக மாவட்டத்தலைவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள திருக் கோயில்களைக் கண்டறிந்து பட்டியலிடுங்கள். அந்த கோயில்களுக்கு அறங்காவலராக பணியாற்ற தகுதியுள்ள நபர்களை தேர்வுசெய்யுங்கள். அவரை முறைப்படி அரசுக்கு நவம்பர் 9-க்குள் விண்ணப்பிக்க வையுங்கள்.

தமிழகத் திருக் கோயில்களைப் பாதுகாக்கும் பெரும்பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.தகுதியான அறங்காவலர் நியமனத்தை கண் காணிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் தலையீடுகள் வந்தால் அதை நீதியும், சட்டமும் தடுக்கும். நாம் அனைவரும் நம்திருக் கோயில்களைப் பாதுகாக்க முன்வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.