மத்திய இணைமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னைவந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சியில் அமித்ஷாவால் பா.ஜனதா மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப் பட்டனர். திருச்சியில் நடந்தவிழா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்க்கும் விழாவாக இருந்தது. பா.ஜ.க தேர்தல் அறிக்கை தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.

முதல்-அமைச்சர் பிரசாரகூட்டத்தில் பொது மக்கள் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவரது கூட்டத்துக்கு அதிகமான ஆட்களைகொண்டு வருகின்றனர். இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டு கால அவலமான ஆட்சிகளால் தமிழர்கள் மோசமான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயம், தொழிற் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது உள்பட பல விஷயங்களை பற்றி தேர்தல்பிரசாரத்தில் நாங்கள் பேசுவோம். பாஜக ஆளுகின்ற மாநிலங்களின் வளர்ச்சிகள் குறித்தும் தேர்தல் பிரசாரத்தில் பேசுவோம்
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply