திருநங்கை பாதுகாப்புமசோதா (2016) என்ற புதிய சட்ட முன் வரைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன் கிழமை நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கபட்டது.

இந்தமசோதாவின் மூலம் திருநங்கைகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்விமேம்பாடு உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண் அல்லது பெண் என்ற யதார்த்தபாலின வரையறையில் இல்லாத காரணத்தினால் சமூகத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட மக்களாக திரு நங்கையர்கள் உள்ளனர். கல்வி உரிமைமறுப்பு, வேலைவாய்ப் பின்மை, மருத்துவ சிகிச்சை குறைபாடுபோன்ற விஷயங்களாலும் திருநங்கையர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தற்போது அறிமுகம் செய்யப் பட்டுள்ள புதிய மசோதாவின் மூலம் ஏராளமான திருநங்கையர்கள் பலன்அடைவர். சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள அந்தமக்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் அத்துமீறல்களை தடுத்து அவர்களையும் பொதுசமூகத்தில் கலக்கச்செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்வதற்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

பினாமி சொத்துக்களை தடுக்கவும், நியாயத்துக்கு புறம்பான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிதிகளை வளைத்து பினாமி சொத்துக்களை வசப்படுத்தி கொள்வதைத்தடுக்கவும் புதிய சட்டத்திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *