ஆந்திரமாநிலம், திருப்பதி ஸ்ரீவெங்க டேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் 3-ந் தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 5 நாட்கள் இந்திய அறிவியல்காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

 

டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளைகாலை 10.25 மணிக்கு ரேணி குண்டா வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக திருப்பதி வெங்க டேஸ்வரா பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்துக்கு வருகிறார். தொடக்கவிழாவில் ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்கிறார்.

 

பின்னர் திருப்பதியில் இருந்து காரில் திருமலைக்குச் செல்கிறார். மதியம் 1 மணி யளவில் திருப்பதி கோவிலில் மோடி தரிசனம்செய்கிறார்.பின்னர் திருமலையில் இருந்து புறப்பட்டு, ரேணி குண்டா வருகிறார். மாலை 3.45 மணியளவில் ரேணி குண்டாவில் இருந்து புறப்பட்டு விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.

Leave a Reply