திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கவரும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக, திருப்பதி விமான நிலையத்தில் பிரமாண்ட ஓய்விடம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளில் இருந்தும் பெரும்பாலோனார் திருப்பதிக்கு வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் தங்கி சிறப்பாக சாமி தரிசனம் செய்யும் பொருட்டு, ரேணிகுண்டாவில் அமைந்துள்ள திருப்பதி விமானநிலைய வளாகத்தில் 1800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன்கூடிய பயணிகள் ஓய்வறை விரைவில் கட்டப்பட உள்ளது.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுக்கு சொந்தமான அந்தஇடத்தை, ஆந்திர மாநில கல்வி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடம் 15 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது  இந்தகழகம், பயணிகள் ஓய்வறையை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை இந்தகாலத்தில் மேற்கொள்ளும் என தெரிவிக்க பட்டுள்ளது.

 

Comments are closed.