திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணனுக்கு வரும்சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப் படாததால், அதிருப்தி அடைந்தவர் இன்று (மார்ச் 14) பா.ஜ.,வில் இணைந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ., டாக்டர் சரணவன், அக்கட்சியின் மருத்துவ அணியின் மாநிலநிர்வாகியாக இருந்தார். இவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தார். நடைபெறவுள்ள சட்ட சபை தேர்தலுக்கு திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தார். ஆனால், மதுரைமாவட்ட திமுக., கோஷ்டிபூசல் காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதியை, அக்கட்சி விரும்பி கேட்காமலேயே, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதியும் தளபதிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்திஅடைந்த டாக்டர் சரணவனின் ஆதரவாளர்கள், தி.மு.க.,வில் இனி நீடிக்கவேண்டாம்; நம்ப வைத்து கழுத்தை அறுத்த கட்சியான திமுக.,வை விட்டு விலகி சுயேச்சையாக போட்டியிடுவோம் என, வலியுறுத்தினர்.

இதனையடுத்து டாக்டர் சரவணன், தனக்கு பா.ஜ., மேலிடத்தில் உள்ள நெருக்கமான நண்பர்கள் வாயிலாக, இன்று அக்கட்சியின் மாநிலதலைவர் முருகன் தலைமையில் பா.ஜ., வில் இணைந்தார். அவர் பா.ஜ., தலைமை அலுவலகம் சென்று பா.ஜ., மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

Comments are closed.