திருப்பூர் முத்தணம் பாளையம் சரஸ்வதிநகரை சேர்ந்தவர் எஸ்.பி.மாரிமுத்து (53). இவர் திருப்பூர் வடக்குமாவட்ட பா.ஜனதா துணை தலைவராக உள்ளார்.

இன்று காலை இவர் வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டுதொழுவத்திற்கு பால்கறக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் விரைந்துவந்து பார்த்தனர்.

அப்போது மாரிமுத்து அடித்து கொலை செய்யப்பட்டு கைகள்கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி திணிக்கப்பட்டு தூக்கில் பிணமாக தொங்கிகொண்டு இருந்தார். அவரது உடல் அருகில் கருப்பு கொடி இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சிஅடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல்கொடுத்தனர். மேலும் பா.ஜனதா நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply