திருமணத்திற்கு பிறகு மனைவியை பலாத்காரம்செய்வதை தடுக்க முடியாது,என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான திருமணத்திற்கு பிறகான குடும்ப வன்முறை மற்றும் திருமணத்திற்கான பிறகான பலாத் காரத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது கேள்வி எழுப்ப பட்டது.

 

இது குறித்து  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி ராஜ்ய சபாவில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், திருமணத்திற்கு பிறகான மனைவி மீதான பலாத்காரம் என்பதை சர்வதேச கண்ணோ ட்டத்தில் புரிந்துகொள்ளலாம்.

என்றாலும் அதை இந்தியாவில் நடைமுறைப் படுத்த முடியாது.

இந்தியாவை பொறுத்தளவில், கல்வி யின்மை, வறுமை, சமூக பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள், மனோபாவம் போன்ற பல்வேறு காரணங்களால் திருமணத்திற்கு பிறகு மனைவிமீதான பலாத்காரத்தை தடுக்க முடியாது.இதுபோன்ற தடைகள் இந்திய கலாச்சாரத்திற்கு ஒத்துவராத ஒன்று என்றார்.

அதேபோல் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், பெண்கள் மீதான குடும்பவன்முறை மற்றும் பொது இடங்களில் வன்முறையை தடுப்பதற்கு உதவும்வகையில் ஒரேமாதிரியான அவசரகால தொலைபேசி அழைப்பு எண் அமைக்கப்படுமா என்று கேட்கப்பட்டது.

33 மாநிலங்களிலும் இதுபோன்ற பெண்களின் உதவிக்கு அவசர தொலைபேசி அழைப்புகள் அமைப்பதற்காக நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply