திருமாவளவனை நீதிமன்றத்தில் சந்திக்கத்தயார் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: நான்கரை ஆண்டுகளாக ஊழலற்ற சிறந்த ஆட்சியை நடத்திவரும் பாஜகவை, கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் ரஃபேல்விமான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தீர்ப்பை கேட்ட பிறகாவது மன்னிப்புகேட்க வேண்டும்.
5 மாநிலங்களில் பாஜக ஊழல் செய்ததாக பொய் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிற சமூக ஆண்கள் மற்றும் பெண்களை தவறாக சித்திரித்துபேசும் ஆதாரம் என்னிடம் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளுக்கு திராவிட இயக்கங்கள் மற்றும் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் தான் காரணம், உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும்.

இதற்காக திருமாவளவன் என்மீது வழக்கு தொடர்ந்தால் நீதி மன்றத்தில் சந்திக்கத் தயார். காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கூட்டணி ஆட்சியை விட, பாஜகவின் தனிப் பெரும்பான்மையான பலத்துடன்கூடிய ஆட்சியே நிலைத்து நிற்கும் என்றார்.

Tags:

Leave a Reply