கோவை இந்துமுன்னணியின் செய்திதொடர்பாளர் திரு. சசிகுமார் நேற்று இரவு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான துயரச் சம்பவம் கடுமையானகண்டனத்துக் குரியதாகும். திரு. சசிகுமார் இந்து முன்னணியில் பல ஆண்டுகள் சமூகப் பணி ஆற்றியவர். சுற்றியுள்ள மக்களுக்கு பல நன்மைகளை செய்தவர். அப்படிப்பட்டவரின் கொலைசம்பவம் மிகவும் வருந்தத்தக்க,கண்டிக்கத்தக்க செயலாகும். திரு. சசிக்குமாரை கொலைசெய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இக்கொலையால் திரு. சசிக்குமாரை இழந்து கண்ணீர் வடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி இயக்கத்தின் நண்பர்களுக்கும் எனது சார்பாகவும், தமிழக பா.ஜ.க. சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply