அரசியல் சாசனம் பற்றி பேச, காங்கி ரசுக்கு அருகதை இல்லை,'' என, பா.ஜ.க, மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே எழுதிய, 'அம்பேத்கரும், இந்திய அரசியல்சாசனம் உருவான விதமும்' நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நுாலை வெளியிட்டார்.

அதில், இல.கணேசன் பேசியதாவது:அரசியல் சாசனம்பற்றி சிலர் பேசுகின்றனர். அதை உருவாக்கிய அம்பேத்கர், 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில், மும்பையில் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக வேட்பாளரைநிறுத்தி, தோற்கடித்தது காங்கிரஸ்.

ஆனால், திறமைமிக்க அம்பேத்கர், பார்லிமென்டுக்கு போகவேண்டும் என, வங்காளத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன், ராஜ்ய சபாவுக்கு அவரை அனுப்பியவர், ஷியாம் பிரசாத்முகர்ஜி.அவர்தான், பாரதிய ஜன சங்கத்தின் ஸ்தாபகர். பின்னாளில், காங்கிரஸ்கட்சியை, இந்திரா காங்கிரசாக மாற்றினர். 'எமர்ஜென்சி' காலத்தில், இதர காங்., கட்சிகள், ஜன சங்கம் மற்றும் சோஷலிஸ்ட் போன்ற பலகட்சிகள் கலைக்கப்பட்டு, ஜனதா கட்சி உருவானது. பின், அதில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறின. அப்படி உருவானதே பா.ஜ.க, ஆனால், காங்., மட்டும், ஜனதாவில் ஐக்கியமாகி விட்டது. அதனால், தேசவிடுதலையில் பங்கெடுத்த, காங்., கட்சி இப்போது இல்லை. வி.வி.கிரி, இந்திரா போன்றோர் உருவாக்கிய இப்போதைய காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு, அரசியல்சாசனம் பற்றி பேச அருகதை இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply