தில்லியில் பாஜக தேசியசெயற்குழு வரும் 6-ஆம் தேதி கூடுகிறது. இதில் கருப்புப்பணம் விவகாரம் உள்பட 2 விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.


இது குறித்து பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: புதுதில்லி மாநகராட்சி கவுன்சில் கூட்டஅரங்கில், பாஜக தேசிய செயற் குழு கூட்டம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறுகிறது. கூட்டத்தை பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தொடங்கிவைத்து பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடி சனிக் கிழமை நிறைவுரையாற்றுகிறார். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.


கூட்டத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. முதலாவது தீர்மானம், குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், சண்டீகர் மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்தவெற்றியை பாராட்டி நிறைவேற்றப்பட இருக்கிறது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக 2-ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்று பாஜக நிர்வாகி தெரிவித்தார்.

 

Leave a Reply