தமிழக சட்ட மன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவ்டேகர், தமிழக சட்டப் பேரவை தேர்தல் குறித்து பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு இறுதிமுடிவு எடுக்கப்படும்.

தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. இதனால் வரும்வாரத்தில் சென்னைக்கு வர உள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்குபிறகு தமிழக பாஜக தேர்தல் கூட்டணி இறுதிமுடிவு குறித்து அறிவிக்கப்படும். மேலும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவது அதன் தனிப்பட்டகருத்து. அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. என்றும் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.

ஆனால் கண்டிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சிகளோடு கூட்டணி கிடையாது என உறுதிபடதெரிவித்தார். பாஜக சார்பில்போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது என்றார்.

 

 

Leave a Reply