சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

திரிபுரா தலை நகர் அகர்தலாவில் இருந்து  பேட்டியளித்தவர், "சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு ஒருவழியாக வந்து விட்டது. இது தமிழக அரசியல்களத்தில் இனிவரும் நாட்களில் பல்வேறு பிளவுகளை ஏற்படுத்தும்.

அதிமுக நெருக்கடியான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. என்னமாதிரியான தலைமையை கட்சி முன்னிறுத்தும் என்பது தெரியவில்லை. இதற்குமுன்னர் இதே வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபணமான போது அவருக்கு விசுவாசமாக ஒருவரை அவரால் முதல்வர் பொறுப்பில் முன்னிறுத்தமுடிந்தது. அது மாதிரியாக நம்பத்தகுந்த நபரை சசிகலாவால் முன்னிறுத்த முடியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் சசிகலா இன்னும் மக்கள் அபிமானத்தை பெறவில்லை" எனக் கூறியிருக்கிறார்.

Leave a Reply