தீவிரவாதம் தழைக்க, மறைமுகமாக நிதி அளித்து ஊக்குவிப்பவர்கள் தங்களது செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் ''இந்தியாவின் மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை உலகரங்கில் முக்கியத்துவம் வகிக்கிறது

தீவிரவாதிகள், நமது சமூகத்துக்கு தீங்கு விளை விக்கவும், நமது நகரங்களுக்கும், மக்களுக்கும், சமூக கட்டமைப்புக்கும் கணக்கி லடங்காத பாதிப்பை ஏற்படுத்தவும் முயற்சித்து வரும் நேரத்தில், இந்திய-அரபு நாடுகளின் உறவுகள் வலுப்படுத்துவது வரலாற்று திருப்புமுனையாகும்.

தீவிரவாதம் தழைக்க, மறை முகமாக நிதி கொடுத்து ஊக்குவிப்பவர்கள் தங்களது செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்தையும், அவர்களுக்கு கிடைக்கப் பெறும் நிதியுதவியையும் ஒடுக்குவதற்கு புதிய உத்தியை வகுக்க உலகநாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

தீவிரவாதத்துடன் மதத்தை தொடர்பு படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். மனிதநேயம் மற்றும் இரக்கமற்ற தன்மை ஆகியவற்றை கொண்டே மனிதர்களை வேறுபடுத்த வேண்டுமே தவிர, ஜாதி, மத, வேறுபாடுகளின் அடிப்படையில் அல்ல" .

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அரபு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் அரபு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் முன்னிலையில்  பேசியது,

Leave a Reply