தீவிரவாதம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புடன் வெளியிடவேண்டும் என்றும் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்றும் மத்திய மந்திரி ராஜ்ய வர்தன் ரதோர்  கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜ்ய வர்த்தன் ரதோர் கூறுகையில், பிரான்சு தீவிரவாத தாக்குதலின் போது அங்குள்ள ஊடகங்கள் செய்திவெளியிடும் போது தீவிரவாதிகளின் நம்பிக்கையை குலைக்கும்பணி நடைபெறுவதாக வெளியிட்டன. எனவே இதேபோன்று பொறுப்புணர்வோடு நம் நாட்டிலும் ஊடகங்கள் செய்திவெளியிட வேண்டும். பொது மக்களுக்கு இதேபோன்ற முறையில்தான் ஊடகங்கள் செய்திகளை வழங்கவேண்டும். அப்படியானால்தான், தேவையற்றை பீதி உருவாகாது” என்று தெரிவித்தார்.
 
மேலும், எப்.எம். தொழில் நுட்பம் விரிவுப்படுத்த படும் என்று பேசிய ரதோர் அதுபற்றி கூறும் போது, வரும் ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகையைகொண்ட நகரங்கள் எப்.எம் நெட்வொர்க் மூலமாக இணைக்கப்படும். இதன் மூலம் 60 சதவீதமக்கள் எப்.எம் தொழில்நுட்பத்துக்குள் கீழ் கொண்டுவரப்படுவர். ஜெய்பூர்-டெல்லி தேசிய நெடுஞ் சாலையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ள எப்,எம் வசதியை ஆய்வுசெய்த பிறகு நாடுமுழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் எப்.எம் நெட்வொர்க் வசதி வழங்குவது முடிவு செய்யப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply