புல்வாமாவில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம்தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச்செய்து, தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினார்.

இந்த சம்பவத்தால், இந்த தேசமே வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறது. வீரர்களின் தியாகம் வீண்போகாது. தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களைத் தண்டிப்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த முறையில் தண்டிக்க வேண்டும் என்பதை நமது ராணுவம் முடிவு செய்யும். எ ன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்திருந்தார்

இந்த நேரத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை வைத்து, நாட்டு மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், இந்திய, பாக்., எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனது.

இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடிகுண்டுகளை வீசியது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்படும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடந்தது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்திய போர்விமானம் எல்லை தாண்டியதாக ஒப்புதல் அளித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முராதாபாத் நகருக்குள் ஊடுருவியதை உறுதியும் செய்தது
இந்தியா மீது பாகிஸ்தான் ஓர் அணுகுண்டு வீசினால், அந்த நாடு பதிலுக்கு 20 குண்டுகளை வீசி நம்மை அழித்துவிடும் என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியாக பதவி வகித்தவரும், பாகிஸ்தான் முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷாரஃப் கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனைதொடர்ந்து, பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால், அதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக, சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்திய ராணுவம், எல்லை பாதுகாப்புபடை வீரர்கள், இந்திய கடற்படை, விமானப்படை ஆகியவை உஷார் படுத்தப்பட்டுள்ளன.

தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
மசூத் அசாரின் மைத்துனர் யுசூப்அசார் மற்றும் முக்கிய கமாண்டோக்கள், பல ஆண்டுகள் பயிற்சிபெற்ற பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், கொல்லப்பட்டனர். இந்த பயிற்சி முகாமை, பயங்கரவாதி மசூத் அசாரின் மைத்துனரான மவுலானா யுசூப் அசார் நடத்திவந்துள்ளான். இன்றைய தாக்குதலில் யுசூப் அசாரும் கொல்லப்பட்டான்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் விமானங்கள் பலத்தை பார்த்து, மிரண்ட பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி சென்றன.

Leave a Reply

Your email address will not be published.