காஷ்மீரில் புல்வாமாவில் ராணுவத்தின்ர் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலைபடை தாக்குதலுக்கு காரணமாவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை தீவிரமாக வேட்டையாடும் பணியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

பாக்.,கில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜெ.இ.எம்.,), தீவிரவாத அமைப்பு தான் காரணம் என்பதை நமது ராணுவமும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பின் பாக்.,கில் உள்ள கைபர் பகுதியின் கமாண்டராக இயங்கிவரும் நுாசுர் மவுல்வி வாதா குஹாசி என்பவன் முக்கியமான காரணம் என்பதையும் ராணுவம் கண்டுபிடித்து உள்ளது.

குஹாஷிதான், ஜெ.இ.எம்., இயக்கத்தை சேர்ந்த காஸி என்பவனிடம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஒப்படைத்துள்ளான். (இந்த காஸி இன்று (18.2.19) காலை நடந்த ராணுவ வேட்டையில் கொல்லப்பட்டான்).

காஸி, பாக்.,கில் உள்ள கைபர் பகுதியை சேர்ந்தவன். அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கானும் அதேபகுதியை சேர்ந்தவர் தான். காஸிக்கும் லஷ்கர் இ தொய்பா இயக்க தலைவர் ஹபீஸ் சயீதுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. காஸிக்கு வெடிகுண்டுசெய்யும் பயிற்சியை குஹாஷியே அளித்துள்ளான். பாக்., பழங்குடி பகுதிகளில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய அனுபவம் உள்ளவன். பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக மாணவர்களை திரட்ட முயன்றவன்.

ஆதில் அகமது தர் என்பவனுக்கு தற்கொலைபடை தாக்குதல் நடத்த தேவையான பயிற்சி, வெடிமருந்து கொடுத்தது காஸிதான். ஆதில், முன்பு அல் கொய்தாவில் இயங்கி விட்டு, பின்பு ஜெ.இ.எம்.,முக்கு மாறியவன்.குஹாஷிக்கும் காஸிக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபன்களுடன் தொடர்பு இருந்தாலும், இவர்களை கட்டுப்படுத்துவது பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தான்.

ஆப்கனில் அமைதி ஏற்பட அமெரிக்க தலைமையில் அங்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதன் பின்னணியில்தான் காஷ்மீரில் தாக்குதல் நடந்துள்ளது. ஆப்கனில் ஏராளமான முதலீடுகளை செய்து பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா செயல்படுத்திவருகிறது. இதையும் சீர்குலைக்கும் விதமாகத்தான் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆப்கனில் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்களுடன் பாக்., ராணுவ துணையோடு அமெரிக்கா பேசிவருகிறது. இந்நிலையில் ஆப்கனில் இருந்த பயங்கரவாதம் காஷ்மீருக்கு மாறி விடக்கூடாது என்ற அச்சமும் நிலவுகிறது.

தற்கொலை படை தாக்குதல் நடத்துவது தலிபன் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்., வழக்கம். புல்வாமாவில் நடந்த கொடூரதாக்குதலும் இந்த பாணியில் தான் நடந்துள்ளது.காஷ்மீரில் பணிபுரிந்த ஒருராணுவ அதிகாரி கூறும்போது, ‛‛இது ஒரு கவலை அளிக்கும் விஷயம். வெடிமருந்தை நிரப்பிய வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் மோத வைக்க முடியும். அதை முன் கூட்டியே அறிந்துகொள்வது கடினம்” என்றார்.

சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை உள்ளூர் ஆட்கள் மூலம் வாங்கி, வெடிமருந்து தயாரிப்பது தான் பொதுவான வழக்கம். ஆனால், புல்வாமா தாக்குதலில், அனைத்து உதவிகளையும் பாக்.,கில் உள்ள ஜெ.இ.எம்., செய்து தந்துள்ளது. தற்கொலை படை தாக்குதல் நடத்துவோருக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டு மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீரில் பல பயங்கரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.