தீவிரவாத முகாம்களை ஒழிக்கா விட்டால் உலகளவில் பாகிஸ்தான் தனிமைப்பட நேரிடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் அரசை எச்சரித் துள்ளனர். பிரிக்ஸ் மாநாட்டில் தீவிரவாதிகளின் தாயகம் என பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தானை வர்ணித்தார். அவரது குற்றச்சாட்டு பாகிஸ்தான் ஊடகங்களை அந்நாட்டுஅரசை எச்சரிக்கும் அளவுக்கு கடும்நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு நெருக்கமான தி நேஷன் என்னும் பத்திரிக்கையின் தலையகம் பாகிஸ்தானை தனிமைப் படுத்துவதில் இந்தியா வெற்றிபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இப்போதாவது விழித்துக் கொண்டு தீவிரவாதிகள் மீது  நடவடிக்கை எடுக்கா விட்டால் நிலைமை மோசமாகும் என அந்த ஏடு எச்சரித் துள்ளது.

இந்நிலையில் சண்டிகரில் பத்திரிக்கை மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை அரசின் கொள்கையாக பாகிஸ்தான் பராமரித்துவருகிறது என்று குற்றம்சாட்டினார். பாகிஸ்தானையும், சீனாவையும் ஒப்பிடும்போது எல்லையில் ராணுவ அத்து மீறல்களை சீனா குறைத்துகொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும் சீனாவுடன் உறவு மேம்பாட்டு இருப்பதாகவும் ராஜ்நாத் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் பாகிஸ் தானோ வேண்டும்மென்றே தவறுகளை மறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply