தீவிரவா தத்திற்கு எதிராக அனைத்து சமூகத் தினரும் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திராசிங் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் கமாண்டர் பர்கான்முசாபர் வானி நேற்று முன்தினம் கோகர்னாக் பகுதியில் பாதுகாப்புபடையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்தநிலையில் பாதுகாப்பு படையினரின் திறமையை மத்தியஅமைச்சர் ஜிதேந்திரா சிங் புகழ்ந்தார். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜிதேந்திரா கூறுகையில்,

‘‘தீவிரவாத த்திற்கு எதிராகபோராட அனைத்து சமூகத்தினரும் அவர்களது அரசியல் சித்தாந்தங்களை பொருட்படுத்தாமல் ஒன்றிணைந்து போராடவேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக பெரியவெற்றியை ஈட்டியுள்ள பாதுகாப்பு படையினரை நினைத்து பெருமைப்படவேண்டும்’’ என்றார். காஷ்மீர் பண்டிட்கள் காலனிகள் உள்ளிட்ட சிறுபான் மையினர் வசிக்கும் இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு, ‘‘பாதுகாப்புக்கு அரசும் சமூகமுமே முழுபொறுப்பு. அவர்களுக்கு முழுபாதுகாப்பு வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.

Leave a Reply