மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: துருக்கியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க உரியநடவடிக்கை எடுக்கப்படும். துருக்கி மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா திரும்பமுடியாமல் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுவேன்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வருகிற தைமாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply