துறைமுக மேம்பாட்டுக்கு இந்தியாவுடன் கைகோர்க்க சர்வதேசநாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன், அது வளர்ச்சிக்கான இயந்திரமாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

இந்திய கடல்சார் மாநாடு மும்பை புறநகர் கோரேகாவ் என்.எஸ்.இ. மைதானத்தில் தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.

3 நாட்கள் நடைபெறும் இந்தமாநாட்டில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் கோவா, குஜராத் மாநில முதல்–மந்திரிகளும் கலந்து கொண்டனர். 10–க்கும் மேற்பட்ட மத்தியமந்திரிகள் கலந்து கொண்டனர். 41 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ரூ.82 ஆயிரம் கோடிக்கும்மேல் முதலீடு திரட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று மத்திய தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி தெரிவித்து இருந்தார்.

கடல்சார் மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, துறைமுக தலைமையிலான மேம்பாட்டுக்கு இந்தியாவுடன் கைகோர்க்க சர்வதேசநாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன், அது வளர்ச்சிக்கான இயந்திரமாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

சிறிய துறைமுகங்களை பிறமாநில பெரிய துறைமுகங்களுடன் இணைப்பதற்கான 'சாகர்மலா' முன்னோக்கு திட்டத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பிரதமர் மோடி பேசுகையில், பூமியில் 70 சதவிதம் கடல்பரப்பு உள்ளது, இதுவே கடல் வழி வர்த்தகம் முக்கியத்துவத்திற்கு  காரணம். கடல் வழி வர்த்தகத்திற்கு காலநிலை மாற்றமானது அதிகமான கவலையை ஏற்படுத்துகிறது. 7500 கி.மீ. தொலைவு பரந்துஇருக்கும் எங்களுடைய பரந்த கடல்பரப்பு பரந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.

துறைமுக தலைமையிலான மேம்பாட்டுக்கு இந்தியாவுடன் கைகோர்க்க சர்வதேசநாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன், அது வளர்ச்சிக்கான இயந்திரமாக இருக்கும். இந்தியா வேகமாக வளரும்பொருளாதார நாடாக உள்ளது. இந்தியாவை உற்பத்திமையமாக்க நாங்கள் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். ’மேக் இன் இந்தியா’ திட்டம்மூலம் இந்தியாவின் முன் முயற்சியை மூடிஸ் நிறுவனம் பாராட்டி உள்ளது. கடல் வழியாக சரக்குகள் கையாளப்படுவது இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியம். இது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இந்திய உட்கட்டமைப்புக்கு உகந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு அதிக ளவில் இந்தியாவில் அன்னிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்துடன், துறைமுகங்களும் ஒன்றிணைக்கப்படும். நமதுவாழ்க்கை முறை கடல்வளத்தை பாதிக்கக் கூடாது. துறைமுகங்களை நவீனப்படுத்த அரசு விரும்புகிறது என்று கூறினார்.

Tags:

Leave a Reply