தென்னிந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் சிலரைக்கொல்வற்கு சதித்திட்டம் தீட்டியவரை சவூதி அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. அவரை தேசியப்புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு வெள்ளிக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சையது ஜாகீர் ரஹீம் என்ற அந்தநபரை சவூதியில் அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு மே மாதம் கைதுசெய்தது. இந்நிலையில், அவரை சவூதியில் இருந்து தில்லிக்கு அந்நாட்டு அரசு அனுப்பிவைத்தது. தில்லியில் அவரைக் கைது செய்த தேசியப் புலனாய்வு அமைப்பினர், வெள்ளிக்கிழமை ஹைதராபாதுக்கு அழைத்துவந்தனர்.
கைதான சையது ஜாகீர் ரஹீம் மீது பாஜக தலைவர்களைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ரஹீமின் மைத்துனரான ஃபர்ஹத் துல்லா கோரி, தேடப்படும் பயங்கரவாதி ஆவார்.பெங்களூரு மற்றும் ஹூப்ளியில் ஹிந்துசமூகத்தைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களைக் கொல்வதற்கு குறிவைத்த லஷ்கர்-ஏ-தொய்பா, ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில்இருந்த ஃபர்ஹத்துல்லா கோரி, தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார்.

Leave a Reply