தெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கர் தேர்தலுக்கான முதற்கட்டவேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.

டெல்லி: தெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கர் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கட்சி வெளியிட்டு இருக்கிறது.

தற்போது இந்தியா ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பரபரப்பாகி உள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கஉள்ளது

 

இதனால் தற்போது பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம்செய்ய தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் தெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கர் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.

மொத்தம் மிசோரமில் உள்ள 40 தொகுதியில் 13 இடங்களுக்கு போட்டியிடு பவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. சத்தீஷ்கரில் உள்ள 90 இடங்களில் 77 இடங்களில் போட்டியிடு பவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது . தெலுங்கானாவில் உள்ள 119 இடங்களில் 38 இடங்களில் போட்டியிடு பவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

பாஜகவின் முக்கியமான உறுப்பினர்கள் எல்லோருக்கும் மிசோரம் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப் பட்டு இருக்கிறது. மாறாக தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரில் முக்கியமான நபர்களின் பெயர் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

சத்தீஸ்கரில் பாஜக முதல்வர் ராமன் சிங் ராஜநந்தகோன் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவின் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு உள்ளது.

Tags:

Leave a Reply