தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியிருப்பது அரசியலுக் காகவே என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா, தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியதை அடுத்து, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். சந்திர பாபு நாயுடுவுக்கு அமித்ஷா எழுதியிருக்கும் கடிதத்தில்,

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் வெளியேறியிருப்பது சற்றும் எதிர்பாராத விஷயம். தெலுங்கு தேசம் தன்னிச்சையாக எடுத்தமுடிவு இது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி கருத்தில் கொள்ளாமல், வெறும் அரசியலுக்காக மட்டும் எடுக்கப்பட்ட முடிவு. அனைத்து மாநில ங்களின் வளர்ச்சியும்தான் பா.ஜ.கவின் முக்கியநோக்கம். ஆந்திராவின் வளர்ச்சிக்கும் அதில் முக்கிய இடமுண்டு. அதற்கான எந்த வாய்ப்பையும் மத்திய அரசு இதுவரை தவறவிட்டதில்லை.

Leave a Reply