ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பாஜக. மத்திய அரசைகண்டித்து தெலுங்குதேச கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா ஏழுமலையானை தரிசனம்செய்ய நேற்றிரவு திருமலைக்கு வந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
 

காலை10 மணிக்கு சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவிற்கு கோவில் அதிகாரிகள் அனில் குமார் சிங்கால், சீனிவாச ராஜூ ரங்கநாயகி மண்டபத்தில் வைத்து தீர்த்தபிரசாதம் மற்றும் சாமி படம், வழங்கினர். இதையடுத்து காரில் அமித்ஷா திருப்பதிக்கு திரும்பினார்.

அமித்ஷா திருப்பதிக்கு வந்த தகவல் தெலுங்கு தேச கட்சியினருக்கு தெரியவந்தது.


தனி அந்தஸ்து வழங்காததால் ஆத்திரத்தில் இருந்த தெலுங்குதேச கட்சியின் குண்டர்கள்  அமித் ஷாவுக்கு கருப்புகொடி காட்ட முடிவுசெய்தனர். அலிபிரி டோல்கேட்டில் திருப்பதி எம்எல்ஏ. சுகுணா, தெலுங்கு தேசகட்சி நிர்வாகி தம்புதி பாஸ்கரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தகவல் தெரிந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அமித்ஷா அலிபிரிக்கு வந்ததும் அவர்கள் கருப்புகொடி காட்டினர். அப்போது பா.ஜ.க.வினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பா.ஜ.கவினரும் தெலுங்கு தேசகட்சியினரும் மோதிக்கொண்டனர்.

மோதலை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைகலைத்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் திருப்பதி அலிபிரிடோல்கேட் பகுதி போர்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவங்களால் திருப்பதிக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

Tags:

Leave a Reply