ஆட்சிக்கு வந்த உடன் அவர் செய்தது 30 லட்சம் போலி கேஸ் சிலிண்டர்களை கண்டுபிடித்து ஒழித்தது…
"ஜன்தன்" திட்டம் மூலம் அனைவருக்கும் வங்கிக்கணக்கு…வங்கிக்கணக்கு மூலம் அரசு மானியம் உதவி போன்ற பரிவர்த்தனை…கறுப்பு பண முதலைகளுக்கு எச்சரிக்கை…அவர்களுக்கு வரியை செலுத்த அவகாசம்….
வரியை செலுத்தாதவர்களை தண்டிக்க 500,1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பு…நகையில் முதலீடு செய்து பதுக்குபவர்களை பிடிக்க நகைகடை கண்காணிப்பு கேமிரா பதிவு…எல்லாம் படிப்படியாக நடக்கிறது…
அம்பானிக்கு உதவுகிறார் என குற்றச்சாட்டு…


அம்பானிக்கு உதவினால் அவர் ஏன் மற்ற நாட்டு முதலாளிகளை இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்க வேண்டும். அம்பானியையே முதலீடு செய்ய சொல்லிருக்கலாமே…ஊர் சுற்றுகிறார் என்று கிண்டல் செய்பவர்களுக்கு மெடிக்கல் ரெப் வேலை கொடுத்தால் தெரியும். சுற்றுவதில் உள்ள கஷ்டம் என்னவென்று.முதல்நாள் பாங்காங் சென்று மறைந்த மன்னருக்கு மரியாதை செய்துவிட்டு….அங்கிருந்து ஜப்பான் சென்று மறுநாள் அணு ஒப்பந்தம் செய்து விட்டு…மறுநாளே கோவா வந்து திறப்பு விழாவில் பங்கேற்பதென்பது சாதாரண விஷயமா?


அப்புறம் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பாக உள்ளார் என கூறுகிறார்கள்…நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்… இந்து கட்சி என்று சொல்லப்படுகிற பிஜேபியில் இஸ்லாமிய அமைச்சர்களும் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு இஸ்லாமிய கட்சியில் வார்டு உறுப்பினராக கூட ஒரு இந்து இருக்கிறாரா என்று? இலவசம் என்றால் ஓடிசென்று வரிசையில் நிற்கும் போது தெரியாத கஷ்டம்….நாட்டிற்காக என்றால் மட்டும் கஷ்டமாகிவிடுகிறதா? நன்றாக  புரிந்துகொள்ளுங்கள் நம்முடைய இந்த சோம்பேறித்தனத்தில் தான் கறுப்புபண ஆசாமிகள் தப்பிக்கிறார்கள்…


மூனு நாளா பால் வாங்கல…
மூனுநாளா நெட் ரீசார்ஜ் பண்ணல…
மூனுநாளா சோறு திண்ணல…
கஷ்டம் தான்…
இல்லணு சொல்லல…
ஆனா…வஉசி 30 வருசமா ஜெயில்ல இருந்தாரு… பகத்சிங் 19 வயசுல உயிரையே விட்டார். மருது பாண்டியரோட மகன் பிள்ளை பேரன்ணு வம்சமே அழிஞ்சது… எல்லாம் எதுக்காக? நாட்டுக்காக..
அத விடவா நம்ம கஷ்டம் பெரிசு? உலகத்துக்கே கார் சப்ளை பண்ற ஜப்பான்காரன் அவன் நாட்டு சுற்றுச்சூழல பாதுகாக்க சைக்கிள்ல போறான்… ஆனா நாம… ஒரு சிறு ஒத்துழைப்பை கூட அரசாங்கத்துக்கு தர மறுக்குறோம்.
எவனாவது ஊழல ஒழிக்க மாட்டானா?
எவனாவது நாட்ட முன்னேத்த மாட்டானா?
எவனாவது தூக்கி நட்டமா நிறுத்த மாட்டானா?-ணு "யாராவது சோடா வாங்குங்களேன்… யாராவது ஆம்புலன்ஸ கூப்புடுங்களேன்"ணு சொல்றமே தவிர நாம எந்த கஷ்டத்தையும் தியாகத்தையும் செய்ய தயாரா இருக்குறதே இல்ல…
நமக்கு மகாதேவி வீரப்பன் மாதிரி… "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ணு நெனைக்குறவன தான் நம்புறோம்… ஏதாவது_நடக்கட்டும்_ புதுசா வராஹன் அவதாரம் … ஆஹ்ஹஹ்ஹா
& & & & & & & & & & & & & & & & &

உண்மையில் மோடி ஆட்சியை குறை சொல்லுபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.
இதை விட ஒரு சிறந்த உழைப்பாளியை சுயநலமற்றவரை அறிவானவரை அனைத்திற்கும் மேலாக துணிச்சல் மிகுந்தவரை தற்கால அரசியலில் யாரையாவது உங்களால் சொல்ல முடியுமா?
மோடி பதவியேற்ற நாளிலிருந்து ஏதேனும் ஊழல் வதந்திகளாவது உள்ளதா?
ஏதேனும் மலைவாழிடங்களுக்கு சென்று அவர் ஓய்வெடுக்க சென்றாரா ??
தன் வீடு தன்மக்கள் தம்மினம் என்பதை மறந்து
தேசத்தின் மகனாய்
"பிர(மாதமாய்)தமராய் "
வாழ்க நீ எம்மான் !!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.