தேசத்துரோகிகளுக்கு ஆதரவாக எழுப்பப்படும் கோஷங்களை ஆதரித்து ஏற்றுக்கொள்வது சகிப்புத் தன்மையாகாது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

விசாகப் பட்டிணத்தில் மின்காந்த சுற்றுச் சூழல் விளைவுகள் மையம் தொடர்பான நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுடன் கலந்துகொண்ட வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

"நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட, குடியரசு தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அப்சல்குருவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதை எப்படி நாம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியும்?

ஜேஎன்யூ. வளாகத்தில் ‘பிராமணீய பண்பாடு’ பற்றி விவாதம் என்று கூறப்பட்டு நிகழ்ச்சி அறிவிக்கபட்டது, ஆனால் கடைசியில் அப்சல்குருவுக்கு துதிபாடும் கூட்டமாக மாறிப்போனது.

எனவே இந்திய ஒருமைப் பாட்டுக்கு எதிராக செயல்படும் சக்திகளை இனங்கண்டு தனியாக பிரித்து பார்க்கப்படவேண்டும்”

Leave a Reply