தேசத்தை அழித்த கருப்புபணத்துக்கு எதிராக போராட வேண்டும் என்று இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.


அரியானாவில் 5 நாட்கள் நடைபெறும் 21வது தேசிய இளைஞர்விழா நேற்று தொடங்கியது.  இதில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: கருப்பு பணம் நமது தேசத்தை அழித்து விட்டது. அதற்கு எதிராக இளைஞர்கள் போராடவேண்டும்.

மேலும், சாதி பாகுபாடு, தீண்டாமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன் முறை ஆகியவற்றுக்கு எதிராகவும் போரிடவேண்டும். கல்வியறிவின்மை, உணர்வற்ற, வக்கிர சிந்தனை ஆகியவற்றுக்கு முடிவுகட்டுதல், சாதியை மீறி உயருதல், பெண்களை தவறாக நடத்துதல், சுற்றுப் புறச்சூழல் நோக்கி இரக்கமற்ற நடவடிக்கை ஆகிய 6 சமூக சவால்களில் இளைஞர்கள் கவனம்செலுத்த வேண்டும். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply