பெங்களூரு இந்திரா நகரில் புதியகட்டடம், தேசிய அளவிலான முதலாவது செவிலியர் கல்லூரியை மத்திய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளர் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் 

பெங்களூரு பொம்மன ஹள்ளியில் ரூ. 150 கோடியில் 200 படுக்கை வசதிகொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சிவமொக்காவில் ரூ.150 கோடியில் 100 படுக்கைவசதி கொண்ட மருத்துவமனை, நரசாப்புரா, ஹாரோஹள்ளி, பல்லாரி, தாவணகெரே, ஹுப்பள்ளியில் 100 படுக்கைவசதி கொண்ட இ.எஸ்.ஐ.மருத்துவமனைகள் கட்டும்பணி விரைவில் தொடங்கப்படும். மாநில அளவில் 12 மருந்தகங்கள் 6 படுக்கைவசதி கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.

கர்நாடகத்தில் 71 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன. முதல் கட்டமாக அதில் 12 மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் என்று கூறினார். 

Leave a Reply