தேசியளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த, 125 ஆண்டு கால வரலாறுகொண்ட காங்கிரஸ் கட்சி, சர்வதேசளவில் மெகாகூட்டணி அமைக்க முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போபால் நகரில் இன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேசியத்தலைவர் அமித் ஷா,  ‘தேர்தலில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகல் கனவு காண்பதாக’ தெரிவித்தார்

 

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தொண்டர்களே கட்சியின் வெற்றிக்குகாரணம் . தேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த, 125 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸ் , சர்வதேச அளவில் மெகா கூட்டணி அமைக்க முயற்கிறது.

வாக்கு வங்கி அரசியல் இந்திய சமூகத்தை கரையான்போல் அழித்துவிட்டது , அதற்கு பாஜக முற்றுப்புள்ளி வைக்கும் . மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது பாஜக ஆட்சி செய்த மாநிலங்கள் எதிரிகளாக பாவிக்கப்பட்டதாக மோடி குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.