மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, 2வது முறையாக மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி தக்கவைத்து கொண்ட நாள் இன்று.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்து வெற்றிக்கொடி நாட்டி இன்றோடு ஓராண்டு நிறைவுபெறுகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி (68) 2ஆவது முறையாக மே 30-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றதன் மூலம், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவாஹர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெற்றார்.

இத்தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தன.

542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவானவாக்குகள் கடந்த ஆண்டு இதே மே 23-ம் தேதி வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிட தக்கது.

Comments are closed.