டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் அமையவுள்ள சர்வதேசமாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல்நாட்டு விழாவில் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

புதிதாக அமையவுள்ள இந்தமையத்தில் மாநாட்டுக்கான அரங்கம், கண்காட்சி அரங்கம், ஆலோசனைக் கூடம், விடுதிகள், சந்தை மற்றும் பணியாளர் களுக்கான அலுவலகம் ஆகிய அனைத்தும் ஒரே சுற்றுவட்ட எல்லைக்குள் அமையவுள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்துக்கான மதிப்பு 26 ஆயிரம்கோடி ரூபாய் என தெரிவித்தார். மேலும், 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறனுக்காக இந்தமையம் அமைக்கப் படுவதாகவும், இது மாநாடு மற்றும் கண்காட்சி மையம் மட்டுமன்றி, சர்வதேச தொழில்மையமாகவும் விளங்கும்

நாட்டில் தற்போது விற்பனையாகும் செல்போன்கள் 80 சதவிகிதம் உள்நாட்டில் தயாரிக்கப் படுகின்றது. இதன் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம்கோடி அன்னிய செலாவணி மிச்சமாகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சில்லறை வர்த்தக துறையில் வேலை வாய்ப்பு பெருகிவருகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால் அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டுமடங்காகி 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை எட்ட முடியும்.

தேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது. மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம்.

 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.