மத்திய அரசு, 'தூய்மை இந்தியா' திட்டத்தைதொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில், நாடுமுழுவதும் தேசிய நினைவுச் சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் பாலித்தீன் பைகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடை இன்று (அக்.,2) முதல் அமலுக்குவருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ்சர்மா நேற்று தெரிவித்தார்.

மேலும், 'தேசிய நினைவுச் சின்னங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பாலித்தீனுக்குதடை அமலில் இருக்கும். நுழைவு வாயிலில் உள்ள காவலாளிகள், சுற்றுலா பயணிகளிடம் பாலித்தீன் பொருட்கள் உள்ளதா என பரிசோதித்து அனுப்பு வார்கள். இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஒருமாதத்துக்கு பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply