தேசிய நெடுஞ் சாலைகளின் ஓரம் அமைந்துள்ள மதுக்க டைகளை அகற்ற அறிவுறுத்தி மாநிலஅரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தஉத்தரவை இன்னும் பல மாநிலங்கள் நிறைவேற்றாமல் இருப்பதன் காரணமாக, மத்திய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சராசரியாக சுமார் ஐந்துலட்சம் விபத்துக்கள் நேர்வதுடன் சுமார் ஒன்றரைலட்சம் உயிர்கள் பலியாகி விடுகின்றன. இந்த எண்ணிக்கை உலகநாடுகளில் இந்தியாவில் அதிகம் எனக் கருதப்படுகிறது. இதற்கு, நாடு முழுவதிலும் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமைந்துள்ள மதுக்க டைகளும் ஒரு முக்கியக் காரணம். இதில் மது அருந்தும் பழக்கம்கொண்ட பல ஓட்டுநர்கள் அதை அருந்தியபடி வாகனங்களை செலுத்துகின்றனர். இதனால், நெடுஞ்சா லைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.

இதைதடுக்க மத்திய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதில் ஒன்றாக அனைத்து மாநில அரசுகளுக்கும் நெடுஞ்சா லைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் படியும், புதிதாக உரிமம் தரவேண்டாம் எனவும் குறிப்பிட்டு இருந்தது.  மதுக்கடைகளால் ஏற்படும் விபத்துக்களை மீண்டும் வலியுறுத்தி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்தியரசு கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:

Leave a Reply