தேசத்திற்கு விரோதமாக கோஷம் போட்டு விட்டு பேச்சுரிமை, அடிப்படை உரிமை என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் உட்பட்டு பாதுகாப்பு கோர முடியாது.,

நீங்கள் உங்களுடைய விருப்ப கொள்கைப்படியும் எந்த ஒரு அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமைகள் போதுமானது.

கருத்துச் சுதந்திரம் :-

இந்திய பாரளுமன்றத்தை தாக்கிய அப்சல் குரு படத்தையும், விமானத்தை கடத்திய மக்பூல்பட் படத்தை நீங்கள் கையில் பிடித்துக் கொண்டு தேசத்திற்கு விரோதமாக கோஷம் போடுவது கருத்துச் சுதந்திரம் கிடையாது.

நமது நாட்டில் சுதந்திரம் நிலைத்திருக்க பிராணவாயு இல்லாத உலகின் மிக உயரமான பனிமலையில் தேசம் காக்கும் ராணுவ வீரர்கள் உள்ள இடத்தில் இந்த மாணவர்கள் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது.

நீங்கள் எழுப்பிய தேச விரோத கோஷம் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.

JNU FACULTY க்கு :-

இந்த தேச விரோத வியாதி எப்படி இந்த மாணவர்களின் மனதில் ஊடுருவியது என்று அறிந்து அது பெரிய வியாதியாக பரவாமல் தடுக்க வேண்டும். மாணவர்களுக்கு சரியான பாதையை காட்டி தேச வளர்ச்சிக்கு இட்டு செல்ல வேண்டும்.

தேச விரோத வியாதியை குணப்படுத்த :-

முதலில் நோய் தடுப்பு மருந்து தர வேண்டும். இதற்கு சரியாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும். இதற்கும் பலனில்லை என்றால் வியாதி உள்ள பகுதியை வெட்டி எடுத்து விட வேண்டும்.

தீர்ப்பு எழுதிய நீதிபதி முதலில் தேச பக்தி பாடலை தனது உத்தரவில் எழுதி உள்ளார். இவர்கள் எழுப்பிய 30 தேச விரோத கோஷங்களை பட்டியல் இட்டு சுட்டிக் காட்டி ஜாமீன் வழங்கியுள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்த கன்ஹய்யா எந்தவித தேச விரோத நடவடிக்கையில் நேரடியாக மறைமுகமாக ஈடுபடக் கூடாது என்றும் காவல்துறை அனுமதியின்றி வெளிநாடு செல்ல கூடாது என்றும் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் காவல் நிலையம் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.

எந்த தேச விரோதியாலும் பாரத தேசத்தின் ஒரு புல்லை கூட அசைக்க முடியாது…!

Leave a Reply