தேநீர் வியா பாரியாக வாழ்க்கையை தொடங்கி தற்போது வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராக உயர்ந் துள்ளார் பாஜக நிர்வாகி அவதார்சிங்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடக்கு டெல்லியைச் சேர்ந்த அவதார்சிங், ஏழ்மையான தலித் குடும்பத்தில் பிறந்தவர். கடுமையான உழைப்பாளி. தேநீர்விற்று வரும் பணத்தில்தான் வாழ்க்கையை நகர்த்திவந்தார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பாஜக.,வில் இணைந்த அவதார் சிங், கடுமையாக உழைத்து அப்பகுதி மக்களின் நன் மதிப்பை பெற்றார்.

அவரது நேர்மையையும், உழைப்பையும் கண்ட டெல்லி பாஜக தலைவர் மனோஜ்திவாரி, மாநகராட்சி தேர்தலில் அவதார்சிங் போட்டியிட வாய்ப்புக்கொடுத்தார். எளிதில் கவுன்சிலராக வெற்றி பெற்ற அவதார் சிங், தற்போது வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வாகி யிருக்கிறார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, “வடக்கு டெல்லி மாநகராட்சியின் நேர்மையான கவுன்சிலராக இருப்பவர் அவதார்சிங். அவரது நேர்மைக்குக் கிடைத்த பரிசுதான் இந்த மேயர் பதவி.

வடக்குடெல்லி மாநகராட்சியின் முதல் தலித்சீக்கியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிவான குணத்தாலும், கடுமையான உழைப்பாலும் இந்த நிலையை அவர் அடைந்துள்ளார்” என்றார்.

அண்மையில் பிரதமர் மோடியை நேரில்சந்தித்து வாழ்த்து பெற்றார் அவதார் சிங்.

அவருடன் தெற்கு டெல்லி மேயர் சுனிதாகாங்ரா, கிழக்கு டெல்லி மேயர் அஞ்சு கமல்காந்த் ஆகியோரும் பிரதமரிடம் வாழ்த்துகளைப் பெற்றனர். மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுமாறு அவர்களுக்கு பிரதமர் அறிவுரை கூறினார்.

Leave a Reply