இன்னும் இரண்டு மாதங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக மேலும் வலுவான கூட்டணி அமைக்க தயாராகிவருகிறது. திமுக.–காங்கிரஸ் கூட்டணி அமைத்த சில நிமிடங்களிலேயே, திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின், விஜய காந்துக்கு அழைப்புவிடுத்தார்.

விஜயகாந்தும் தி.மு.க. கூட்டணிக்கு உடனடியாக சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் கேட்டகேள்வி அரசியல் களத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. முதலமைச்சர் ஆகும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த், நான் "கிங் ஆக இருக்கணுமா? கிங் மேக்கரா இருக்கணுமா?" என்று கேட்டு அரசியல் களத்தையே அதிரவைத்தார்.

இந்நிலையில், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாளை சென்னை வந்து தமிழக பாஜக. மூத்த தலைவர்களை சந்தித்து கூட்டணிதொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு அவர் தேமுதிக. தலைவர் விஜய காந்தை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தசந்திப்பை தொடர்ந்து தேமுதிக.–பாஜக. கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply