சென்னை ராயப் பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தேமுதிக தனித்து தேர்தலைசந்திக்கும் என்றார். 
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், தேமுதிக தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இது ஒருவகையில் ஆறுதலையும், வரவேற்பையும் பெறுகிறது. பாஜக கூட்டணியில் சேராமல் இருந்தது வருத்தத்தை தந்தாலும், திமுககூட்டணியில் சேருவார் என்ற யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத் தக்கது.
 
ஏனென்றால் தொடர்ந்து ஊழலை எதிர்க்கும் ஒருகட்சியாக பாஜக.,வைப் போன்றே, தேமுதிகவும் நிற்க வேண்டும் என்று நினைத்திருப்பது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாங்கள் அனைவரும் சேர்ந்து இருக்கவேண்டும் என்று நினைத்தது, வாக்குகள் சிதறாமல் பெறவேண்டும் என்பதற்காகத்தான். திமுக போன்ற கட்சிகளுடன் சேர்ந்து அந்தகனவு சிதைந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. அந்தந்த கட்சியும் தனித்து நின்று தங்களதுபலத்தை நிரூபிப்பது தமிழக அரசியலில் நல்ல திருப்புமுனை என்று நினைக்கிறேன் என்றார்.

Leave a Reply