தேர்தலை பற்றி எனக்கு கவலையில்லை ர், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். சர்ஜிக்கல் தாக்குதலால் பாகிஸ்தான் பயந்துபோய் உள்ளது. இந்த தாக்குதல் மூலம் நமது பலத்தை அறிந்து வைத்துள்ளது. எல்லையில் நிலவிய அசாதாரண சூழல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்துநதி இந்தியாவிற்கு சொந்தம் பாகிஸ்தானுக்கு அல்ல. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பெற்றுத்தரப்படவேண்டும் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கமாட்டோம். தேர்தல் குறித்து எனக்கு எந்த கவலையுமில்லை. விவசாயிகள் நலனே எனக்குமுக்கியம். தேர்தலுக்காக எந்த பணிகளையும் செய்யவில்லை. துவங்கிய அனைத்து திட்டங்களையும் முடிப்பதே அரசின்நோக்கம். அரசியல் காரணங்களுக்காக எந்த திட்டமும் துவக்கப்படவில்லை.ஊழலும், முறைகேடும் ஏழை நடுத்தரமக்களை பாதித்துள்ளது.

 

மின்னணு பரிவர்த்தனை குறித்து தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். கறுப்புபணம் மீண்டும் புழக்கத்திற்கு வருவதை தடுக்க மின்னணு பரிவர்த்தனைக்கு மாறவேண்டும். மளிகை பொருட்களை கூட மின்னணு பரிவர்த்தனையில் வாங்கலாம். கறுப்புபணத்திற்கு எதிரான யுத்தத்தில் சாமான்ய மக்களும் ஈடுபட வேண்டும். பணபரிவர்த்தனை செல்போனிலேயே மேற்கொள்ளுங்கள். மக்கள் தொகையைவிட செல்போன் உபயோகம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. கிராமப்புறமக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதே நோக்கம். பாகிஸ்தானில் கள்ள நோட்டுக்களை தடுக்க அந்நாட்டு அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும். இந்தியாவில் கறுப்பு பணம் ஊழல் வறுமைக்கு எதிராக போராட வேண்டும் .

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பிரதமர் பேசியது: .

Tags:

Leave a Reply