விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தராஜன் , அப்பகுதியில் அமைந்துள்ள நடேச நகர் பூங்காவில்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால், இருதிராவிட கழகங்களும் வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருப் பதாகவும் விமர்சித்தார். 

தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது ஏற்புடையதல்ல என குறிப்பிட்ட தமிழிசை சவுந்தர ராஜன், நடுநிலையுடன் செயல்படவேண்டும் என வலியுறுத்தினார். தாம், போட்டியிடும் விருகம் பாக்கம் தொகுதிக்கு என தனி தேர்தல்அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், வெற்றிபெற்ற பின்னர் தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

Leave a Reply